கீழே கிடந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் !

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:14 IST)
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கீழே கிடந்த ரூ.1.75 பணத்தை எடுத்து போலீஸாரிடம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகில் மனித நேயம் உள்ளது என்பதை பல மனிதர்களின் செயல்கள் நிரூபித்து வருகின்றனர். நேற்று ஆதரவற்ற ஒரு இளைஞருக்கு ஒரு பெண் தனது சிறுநீரகத்தை தானம் கொடுத்தார். இதற்காக பிரதமர் மோடி அப்பெண்ணைப் பாராட்டினார்.

இந்நிலையில் இன்று சென்னை  மெரினா அருகே உள்ள காமராஜன் சாலையில் கீழே கிடந்த ரூ.1.75 பணத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியத்தை நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டி, அவருக்கு சான்றிதழ் வழங்கினார். இந்தச் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்