சிறுவயது ஆசை… இப்போது ஒரு ஹீரோவைப் போல உணர்கிறேன் – ஆட்டநாயகன் அஸ்வின்!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:23 IST)
சேப்பாக்கம் மைதானத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற அஸ்வின் ஒரு ஹீரோவைப் போல உணர்வதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 8 விக்கெட்களையும் ஒரு சதமும் அடித்த தமிழக வீரர் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர் ‘சிறுவயதில் இந்த மைதானத்தில் ஒரு போட்டியாவது விளையாடுவேனா என்ற ஏக்கம் இருந்தது. என்னுடைய அப்பா அனைத்து போட்டிகளையும் காண என இங்கு அழைத்து வருவார். ஆனால் இப்போது இதே மைதானத்தில் ரசிகர்கள் எனக்காக கைதட்டுகிறார்கள். இதுவரை சென்னையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் இதுதான் சிறந்த போட்டி. இப்போது ஒரு ஹீரோவைப் போல உணர்கிறேன்.’ எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்