அனைவருக்கும் கல்விதான் திராவிட மாடலின் நோக்கம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (13:03 IST)
இன்று “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் கல்வியே அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்திற்கு பிறகு முழுமையாக செயல்பட உள்ள கல்வியாண்டு இதுவாகும்.

இந்நிலையில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படிக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். 2025ம் ஆண்டுக்குள் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பிழையின்று எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்ள இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்