தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளில் மக்கள் பலர் பணத்தை இழந்து வருவதும், பலர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதைடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை இன்றைய இளைஞர்களும், பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும். பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.