தம்மாத்துண்டு மாஸ்க்குக்கு 200 ரூவாயா? – அபராதம் கேட்ட காவலர்களிடம் எகிறிய பெண்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:56 IST)
தஞ்சாவூரில் மாஸ்க் அணியாமல் வந்ததற்காக அபராதம் விதித்த காவலர்களை பெண் ஒருவர் கேவலமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் சென்றால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸார் வாகன சோதனையின்போது பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் வந்துள்ளார். அதற்காக அவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மாஸ்க் போடாததற்கு 200 ரூபாய் அபராதம் கேட்க வெட்கமாக இல்லையா என கேட்டதுடன் காவல்துறையினர், மாவட்ட ஆட்சியரையும் அவதூறாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்