அதிமுக அரசு எடுத்த முடிவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி அடையும் திமுக: தனியரசு எம்எல்ஏ பேச்சு

வெள்ளி, 22 நவம்பர் 2019 (23:13 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள தனியரசு எம்எல்ஏ எதையும் எதார்த்தமாக வெளிப்படையாக பேசும் தன்மை உள்ளவர். அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அவர் அதிமுகவுக்கு முழு ஆதரவுடன் பேசாமல், நடைமுறையை பேசுவார் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்துகொண்ட தனியரசு எம்எல்ஏ ’உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசு எடுத்த முடிவுக்கு திமுகவும் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவித்தார்
 
மாநகராட்சி மேயர்களை மறைமுகமாக தேர்வு செய்ய தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து இருந்தாலும், அவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்று தனியரசு எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார் 
 
முழுக்க முழுக்க இந்த அவசர சட்டம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆகவே போடப்பட்டது என்றும் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் ட்தொகுதி மற்றும் நகராட்சி தலைவர் தொகுதியை பிரித்துக் கொடுப்பதில் ஏற்படும் சிக்கல் காரணமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும் இந்த சட்டம் இயற்றப்பட்டது அதிமுகவுக்கு மட்டுமன்றி திமுகவுக்கும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்துக் கொடுப்பதில் உள்ள சிக்கல்கள் தீர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனியரசு எம்.எல்.ஏவின் இந்த எதார்த்தமான பேச்சை அனைவரும் ரசித்து கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்