கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா...?

செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். 
தாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது உடலின் அத்தியாவசியமாக உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்ற உணவுகளில் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். 
 
ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் எலும்பு தேய்மானத்தை சரி செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் மூட்டுவலி, வீக்கம் மற்றும் வலியை குறைக்கலாம். செம்பு காப்பானது மனிதர்களுக்கு ஒரு மருந்து போல செயல்படுகிறது, மேலும் செம்பு காப்பு அணிவது எலும்புகள் தேய்மானம் அடைவதை தாமதப்படுத்துகிறது.
 
செம்பு உடலில் இருக்கும் 99 சதவீத பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்தில் அழிக்கிறது. பாக்டீரியாக்களை அழிப்பதற்கு இதனுடன் நேரடி தொடர்பு தேவைப்படுகிறது. அதற்கு செம்பு காப்பு சிறந்த தேர்வாக இருக்கிறது.
 
இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தாமிர குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செம்பு காப்பு அணிவித்த பிறகு சில நாட்களில் அவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
நமது உடல் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை உற்பத்தி செய்வதற்கு தாமிரம் சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். வயதாவதை தாமதப்படுத்துவதற்கும் சருமத்தில் சுருக்கங்களை குறைப்பதற்கும் கொலாஜன் மிகவும் அவசியமானதாகும்.
 
சமநிலையற்ற அல்லது குறைவான தாமிரம் என்பது நரம்பியல் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது. சமநிலையற்ற தாமிர மாற்றங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி அல்சைமர் நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது. கையில் செம்பு காப்பு அணிவதன் மூலம் இந்த குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்