ஒரு மக்களவை துணை சபாநாயகர் வந்திருக்கின்றேன்... தம்பிதுரை ஆவேசம்

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (12:39 IST)
ஒரு மக்களவை துணை சபாநாயகர் வந்திருக்கின்றேன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை கழக அதிகாரிகள் வரமாட்றார்கள்? என கரூர் அருகே மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசமடைந்தார். 
மேலும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில், கடந்த சில தினங்களாகவே, கரூர் மக்களவை உறுப்பினரும், லோக்சபா மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று வருகின்றார். 
 
இந்த தொகுதியின் எம்.எல்.ஏ தகுதிநீக்கம் செய்யப்பட்டதோடு இந்த தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தனது தொகுதி மக்களுக்காகவும், தமிழக அரசு, அந்த தொகுதியின் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி குற்றம்சாட்டி வந்தனர். 
 
எனவே, மக்களவை உறுப்பினரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இரண்டு பேரும், ஆங்காங்கே, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று சேந்தமங்கலம் கீழ் ஊராட்சி, சேந்தமங்கலம் மேல் ஊராட்சி, இனுங்கனூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரை அடிப்படை பிரச்சினைகளாக, தார்சாலைகள் இல்லை, என்றும் குடிநீர் வசதிகள் இல்லை என்றும் தெருவிளக்குகள் இல்லை என்றும் சென்ற இடங்கள் எல்லாம் மக்கள் புடைசூழ, முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
முன்னதாக குரும்பபட்டி என்ற இடத்தில் அடிக்கடி, இந்த குடிநீர் வாரிய அதிகாரிகளும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் மக்களின் குறைகளை தீர்க்க வரவில்லை என்றும், அதே நேரத்தில் ஒரு மக்களவை உறுப்பினரும், லோக் சபா துணை சபாநாயகர் ஒருவர் வந்திருக்கின்றேன் என்று இல்லாமல் அலட்சியமாக உள்ளனர் என்று மைக்கில் அவரது உதவியாளரிடம் திட்டி, கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
மேலும், இனுங்கூர் ஊராட்சி தலையாரிப்பட்டி என்ற இடத்தில் தீண்டாமை பிரச்சினை, தலைவிரித்தாடுவதாகவும், ஒரு பகுதி அதாவது ஒரு இன மக்கள் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தருவதில் பாரபட்சம் காட்டுவதாக கண்ணீர் மல்க பெண்கள் மனுக்கள் அளித்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்தது.

சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்