பொதுமக்கள் சேர்த்து கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி விழா

வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (17:49 IST)
கரூர் சீனிவாசபுரத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் சேர்த்து கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி விழா – உற்சவர் விநாயகருக்கு மஹா தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆண்டாண்டு காலமாக, விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சி கொண்டாடுவது வழக்கம், இந்நிலையில் 4 ஆவது ஆண்டாக, சுமார் 5 அடி உயரத்தில் சிங்கத்தின் மேல், உற்சவர் வடிவத்தில் எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீ விநாயகர் பெருமானுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டதோடு, மஹா தீபாராதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆன்மீக செம்மல் விருது பெற்ற மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்றனர்.


 
சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்