அதிமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்கும் தம்பிதுரை? உண்மை பின்னணி என்ன?

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (11:32 IST)
சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். 
 
இதனை வைத்துக்கொண்டு அமமுக தலைவர் டிடிவி தினகரன் முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் தம்பிதுரை தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க விரும்புகிறார் கருத்து தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 
 
இதோடு மட்டுமல்லாமல் கட்சிக்குள் உள்ள அதிருப்தி காரணமாக தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதர்கு பதில் அளித்துள்ளார் தம்பிதுரை. அவரி கூறியது பின்வருமாறு, 
 
நான் தனிக்கட்சி துவங்க போவதாக வெளியான செய்தி தவறானது. இப்போது எனக்கு அப்படி எதுவும் திட்டமில்லை. தனிக்கட்சி துவங்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை. பாஜக கட்சி அதிமுகவை அடிமை போல நடத்துகிறது என்றுதான் கூறி இருந்தேன், மற்றபடி வேறு எதுவும் இல்லை என தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்