பிரதமர் வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் இந்த 10% தேவைப்பட்டிருக்காது: தம்பிதுரை ஆவேசம்

செவ்வாய், 8 ஜனவரி 2019 (18:26 IST)
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதுகுறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்கள் இதுகுறித்து தங்கள் கருத்தை மக்களவையில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக எம்பி தம்பிதுரை தனது கருத்தை மக்களவையில் ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற்றமடைய பல திட்டங்கள் இருக்கும்போது இடஒதுக்கீடு ஏன்? படித்திருந்தும் அவமதிக்கப்பட்டதால் தான் அம்பேத்கர் தலித்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரினார். சமூகத்தில் பொருளாதாரத்தை வைத்து இடஒதுக்கீடு வழங்குவது முறையானது அல்ல.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இதுவரை மத்திய அரசு என்ன செய்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் பலனளிக்கவில்லை என்றால் தான் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.  

நாட்டில் சாதியம் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் அனைவருக்குமான நீதி நிலைநாட்டப்படும். தமிழகத்தில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வசிக்கிறார்கள். பிரதமர் அறிவித்தபடி ரூ.15லட்சம் வழங்கினால் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது...?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்