பெரியார் குறித்து அவதூறு பேச்சு: சிறையில் அடைக்கப்பட்ட யூடியூப் பிரபலம்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:52 IST)
தந்தை பெரியார் குறித்து அவதூறாக யூட்யூபில் பேசிய யூடியூப் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தந்தை பெரியார் குறித்து பெருமையாகவும் அவமரியாதையாவும் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகள் அடிக்கடி பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
இந்த நிலையில் தந்தை பெரியார் குறித்து ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக சீதையின் மைந்தன் என்ற தட்சிணாமூர்த்தி என்ற யூடியூப் பிரபலம் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அக்டோபர் 29-ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது
 
இதனை அடுத்து சற்றுமுன் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் சீதையின் மைந்தன் என்ற தட்சிணாமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்