விடுதலை ஆகிறார் சுதாகரன்: அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஒருவருடம் சிறை!

வியாழன், 14 அக்டோபர் 2021 (12:47 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்காண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ரூபாய் 10 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் 10 கோடி அபராதம் செலுத்திவிட்டு நான்கு ஆண்டுகளில் விடுதலையாகினர். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ரூபாய் 10 கோடி அபராதத் தொகை செலுத்தாததால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சுதாகரன் வரும் 16ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சுதாகரன் விடுதலை ஆக வேண்டிய நிலையில் ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் சிறையிலிருந்த 89 நாட்களை கணக்கில் கொண்டு வரும் 16ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விடுதலை ஆனவுடன் அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்