பெற்றோருக்கு தெரியாமல் ஆண் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி: சென்னையில் பரபரப்பு

வியாழன், 13 அக்டோபர் 2022 (12:54 IST)
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பெற்றோருக்கு தெரியாமல் ஆண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளதாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை திருவொற்றியூரில் பெற்றோருக்கு தெரியாமல் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது
 
மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான உறவினர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவி கடந்த 10 மாதங்களாக கர்ப்பமாக இருந்ததை கூட அவருடைய பெற்றோர்கள் அறியாமல் இருந்தது குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
 
மேலும் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு மாணவி 10 மாதமாக இருந்து குழந்தை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்