மகளிருக்கு இலவசம் என்பதால் பேருந்துகள் நிறுத்தம்: கலெக்டரின் அதிர்ச்சி பேச்சு..!

புதன், 3 மே 2023 (12:08 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சி தொடங்கிய போது வெளியான முதல் அறிவிப்புகளில் ஒன்று மகளிர்க்கு பேருந்துகளில் இலவசம் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மகளிர் இலவச பேருந்தால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளதாகவும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இருப்பினும் உங்கள் பகுதிக்கான பேருந்து குறித்த வாய்ப்புகளை கேட்டு விண்ணப்பம் அளித்தால் அந்த பகுதிக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் துரை ராமச்சந்திரன் தெரிவித்தார்.
 
நகரங்களில் மட்டுமே மகளிர்களுக்கு இலவச பேருந்து என்ற சலுகை கிடைத்து வருகிறது என்றும் பல கிராமங்களில் பேருந்துகளே இல்லை என்பதால் இலவச சலுகையை மகளிர் அனுபவிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்