அரசு பேருந்துகளுக்கு பெண்களுக்கு இலவச பயணம்.. ராகுல் காந்தி அறிவிப்பு..!

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:40 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இங்கு ஆளும் பாஜகவுக்கும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே வந்த கருத்துக்ணிப்புகளீல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் ஆட்சி அமைத்த முதல் நாளில் இருந்தே அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் தெரிவித்தார். 
 
காங்கிரஸ் கட்சியின் ஐந்தாவது முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவிப்பதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே டெல்லி தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசம் என்பது என்ற முறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்