ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: எப்போது விண்ணப்பிக்கலாம்? முக்கிய அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (16:46 IST)
ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்தின் போது ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் விருப்பப்படும் ஆசிரியர்கள் தங்களுக்கு தேவையான இடத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பம் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் 2024-25 கல்வி ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை ஆசிரியர் கல்வி மேலாண்மை தகவல் முறைமை இணையதளம் வழியாக பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொது மாறுதல் விருப்பத்தை தெரிவிக்கும் ஆசிரியர்களின் இடம் மாறுதல் குறித்த அறிவிப்பு விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்