கல்லூரி முதல்வரை மாற்ற எதிர்ப்பு : கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் போராட்டம்

J.Durai

செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:44 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. 
 
இங்கு சுமார் 4500 மாணவ, மாணவிகள் பேர் படித்து வருகின்றனர். சுமார் 200 பேராசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
 
26 ஆசிரியர்கள் நிரந்தரமாக பணிபுரிந்து வருகின்றனர்.  பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 
இந்த நிலையில் கடந்த 2022 ம் வருடம் இக்கல்லூரிக்கு பொறுப்பு முல்வராக புவனேஸ்வரன் பொறுப்பேற்றார்.
 
அவர் பொறுப்பேற்றதில் இருந்து கல்லூரியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.  கல்லூரி கட்டமைப்பை மேம்படுத்தியது, ஆசிரியர் அல்லாத பணியாளர்களளுக்கு செம நல்ல நதி திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கல்லூரியை மேம்படுத்தினார். இதனால் கல்லூரியில் பணிபுரியும் சில பேராசிரியர்களின் நெருக்கடிகளுக்கு முதல்வர் புவனேஸ்வரன் ஆளாக்கப்பட்டார். 
 
மேலும் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகி செல்லுமாறு சில ஆசிரியர்கள் முதல்வரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
 
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதினார்.
 
இதையறிந்த 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், முதல்வர் அலுவலகம் முன்பு அமர்ந்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பொறுப்பு முதல்வராக உள்ள புவனேஸ்வரனை நிரந்தர முதல்வராக வேண்டும் அவரின் ராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதற்கு பல மாணவர்களும் ஆதரவு தெரிவித்தனர். 
 
மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். 
 
கல்லூரி முதல்வரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் மாணவர்களும் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்