ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட ஒருசில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்ததன் எதிரொலியாக இதுகுறித்து அதிகாரிகளுடன் இன்று இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இன்று முதன்மை செயலாளருடன் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி நாளை முதல் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இதனால் அரசு விரைவில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.