அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:24 IST)
ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமைச்சருடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் குழுவினர் மற்றும் அமைச்சருடனான நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஆசிரியர்கள் தற்போது உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் இல்லை என்றும் தமிழக முதல்வரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.