கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இருந்த படத்தில் இப்போ இவர்தான்…!

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (10:06 IST)
உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டது முதலே அவர் அமைச்சர் ஆவார் என பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் சமீபத்தில்  தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அமைச்சரான பின்னர் “இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள மாமன்னன் படம்தான் என்னுடைய கடைசி படம். நடிகர் கமல் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படத்தில் இருந்து விலகி விட்டேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது கமல் தயாரிப்பில் அவர் நடிக்க இருந்த படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசன் விஜய் சேதுபதியை சந்தித்து கதையை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்