வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை: தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
புதன், 20 நவம்பர் 2024 (12:18 IST)
தஞ்சையில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை ரமணி குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக ரமணி பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காதல் பிரச்சினையில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மதன் குமார் என்ற இளைஞர் ஆசிரியை ரமணியை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், ரமணி காதலை ஏற்று கொள்ளாததால் ஆத்திரமடைந்த மதன்குமார் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கொலையாளியை தேடி வருகின்றனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்