மாணவிகள் கழிப்பறையை எட்டிப்பார்த்த ஆசிரியர்

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (16:57 IST)
ஒசூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து, மாணவிகள் கழிப்பறையை கணித ஆசிரியர் ஒருவர் எட்டிபார்த்துள்ளார்.


 

 
ஒசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து, மாணவிகள் கழிப்பறையை கணித ஆசிரியர் ஒருவர் எட்டிபார்த்துள்ளார்.
 
இதை பார்த்த ஒரு மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். அதைதொடந்து மாணவியர் சிலரிடம் அவர் சில்மிஷம் செய்தததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
இதையடுத்து ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் மல்லிகா பள்ளியில் விசாரணை செய்து வருகிறார். மேலும் அந்த கணித ஆசிரியரை சேகரை விடுப்பில் செல்ல உத்தரவிட்டார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்