நஷ்டம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி.... இனிமேல் அப்படித்தான்: ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (14:43 IST)
டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைப்பதன் மூலம் ஓரு  ஆண்டுக்கு 300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டாலும்,  மக்கள் நன்மை கருதி இந்த முடிவை ஜெயலலிதா உறுதியாக எடுத்துள்ளாராம்.
 

 
தமிழகத்தில் ஆறாவது முறையாக முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதா, முதல்கட்டமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை இரண்டு மணி நேரமாக  குறைக்கவும், தமிழகம் முழுக்க சுமார் 500 கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழகம் முழுக்க உள்ள 6826 டாஸ்மாக் கடைகள் மூலம், ஒரு நாளுக்கு ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
 
டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக 12 மணிக்கு திறப்பதாலும், 500 கடைகளை மூடுவதாலும், அரசுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது.
 
காரணம், டாஸ்மாக் கடைகளில் மாலை விற்பனை தான் அதிகம், காலை நேரத்தில் விற்பனை குறைவே. இதனால், அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படலாம். அப்படியே இருந்தாலும், ஓரு ஆண்டுக்கு 300 கோடி வரை மட்டுமே வருமானம் இழப்பு ஏற்படும்.
 
ஆனால், இந்த இழப்புகளை சரிகட்ட புதிய முயற்சியை டாஸ்மாக் நிறுவனம் எடுத்துள்ளதாம். அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

 
 வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்