சில தினங்களுக்கு முன்பு கருப்பட்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரை பட்டாக்கத்தி வைத்து மிரட்டி டாஸ்மாக் கடைக்குள் இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் 200க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றிருந்த நிலையில் நேற்று இரவு இரயில் நிலையம் அருகில் இருந்த மற்றொரு கடையில் மதில் சுவரை துளையிட்டு உள்ளே இருந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.