ஜெயலலிதாவின் உத்திரவை காற்றில் பறக்க விட்ட கரூர் மாவட்ட நிர்வாகம்

ஞாயிறு, 19 ஜூன் 2016 (14:41 IST)
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்றவுடன் முதல் உத்திரவு பூரண மதுவிலக்கை படிபடியாக கொண்டு வரும் பொருட்டு ஏற்கனவே காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடைகளை மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மாற்றினார். 


 

 
மேலும் இன்று முதல் தமிழகத்தில் 500 கடைகள் மூடல் என்று உத்திரவிட்டும், கரூர் மாவட்டத்தில் 14 கடைகள் மூடல் என்றும் நேற்றே அறிக்கை விட்டதோடு, இன்று முதல் அதை மூட வேண்டுமென்றும் உத்திரவிட்டுள்ளார். 
 
ஆனால் தமிழக முதல்வரின் உத்திரவை காற்றில் பறக்க விட்டது போல், இங்குள்ள கரூர் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. என்னவெனில் இரவு பகலாக 24 மணி நேரமும், கரூர் மாவட்டத்தில் கரூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, மாயனூர், புலியூர், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் மதுபானக்கடைகளில் உடனிருக்கும் பார்களில் சரக்கு என்கின்ற மதுபானங்கள் விற்கப்படுகின்றன. 
 
மேலும் மூடப்படும் கடைகளிலேயே இன்று கள்ளா வசூல் பெருமளவில் களை கட்டுவதாகவும், இந்த சமூக விரோத போக்கை கரூர் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதோடு, கரூர் மாவட்ட காவல்துறையும் கள்ளா கட்டுவதற்காக விட்டு விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
மேலும் அங்கு வரும் மதுபானபிரியர்களும், ரூ 88 மதிப்புள்ள சரக்கை ரூ 150ற்கு வாங்கியும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மதுபானப்பிரியர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
தமிழக முதல்வரின் உத்திரவை காற்றில் பறக்க விட்ட கரூர் மாவட்ட நிர்வாகத்தையும், அந்த தவறை தட்டிக் கேட்பதை விட்டு, விட்டு, பச்சை கொடி காட்டுவது போல் இங்குள்ள கரூர் மாவட்ட காவல்துறை நிர்வாகம் செயல்படுவதாக பொது நல ஆர்வலர்களும், மது பான பிரியர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சி.ஆனந்தகுமார் -செய்தியாளர் - கரூர் மாவட்டம்

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்