ராம்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை என்னவாயிற்று? - மீண்டும் தமிழச்சி

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (11:46 IST)
ராம்குமார் மரணம் நிகழ்ந்து இவ்வளவு நாள் ஆகியும், அவரது மரணம் குறித்த பிரேத பரிசோதனை என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர், பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை கூறி வந்தார்.
 
அதன்பின், ஜெயலலிதான் உடல் நிலை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பல காவல் நிலையங்களில், அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன. 
 
கடந்த செப்.16ம் தேதிக்கு பின் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எந்த பதிவும் இடவில்லை. இந்நிலையில், நேற்று ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், தன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார்.
 
மேலும், இன்று அவர் இட்டுள்ள பதிவில், சுவாதி குறிப்பிட்டுள்ளதாவது:
 
ராம்குமார் உடல் மருத்துவ பரிசோதனை அறிக்கை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். இத்தனை நாட்களாகியும் அரசு தரப்பு நடவடிக்கைகள் எதுவும் ஏன் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன?
 
ராம்குமார் வழக்கறிஞர் தரப்பு கூட 'கள்ள மெளனம்' காக்கிறது. அத்தனை முயற்சிகளையும் நசுக்கி ஒழித்த தமிழக காவல்துறை என்ற 'நச்சு பாம்பு' இன்னும் தமிழ்நாட்டிற்குள்தான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை தமிழர்களும் மறந்து விட்டார்களே....
 
இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது தமிழகத்தில்....?
 
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்