மக்கள் ரிலாக்ஸாக இருக்கலாம்... வெதர்மேன் அப்டேட்!!

வியாழன், 11 நவம்பர் 2021 (11:36 IST)
தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழகத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.  
 
இது இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டடுள்ளது. அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பெட்டை, திருவண்னாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இந்நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, மிக மோசமான கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். இனி விட்டு விட்டு சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பொழியும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட சென்னை - ஶ்ரீஹரிகோட்டாவை கடக்கும் வரையில், காற்று அதிகமாக வீசும்.
 
இன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்தவரை இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்யும். மக்கள் ரிலாக்ஸாக இருக்கலாம். மிக முக்கியமான கட்டத்தை தாண்டிவிட்டோம். கரையை கடக்கும் போது காற்று 40 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்