அடுத்த 5 நாட்களுக்கு செம மழை! எந்த பகுதியில்..? – வானிலை ஆய்வு மையம்!

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (12:42 IST)
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் காற்று மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும், தருமபுரி, புதுக்கோட்டை பகுதியிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்