தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது. முன்னதாக குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே இபாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதிகமானோருக்கு இ –பாஸ் கிடைக்காமல் போவதாலும், இடைத்தரகர்கள் பலர் இதன் மூலமாக முறைகேடுகளில் ஈடுபடுவதையும் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.
இ-பாஸ் தானியங்கு முறையில் வழங்கப்படுவதால் பெயர்கள், வண்டி எண் குறித்த சோதனைகள் இன்றியே இ-பாஸ் அனுமதியை தானியங்கு முறை வழங்குகிறது. இந்நிலையில் திருப்பூரிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி செல்ல வடிவேலுவின் நகைச்சுவை பாத்திரமான சூனாபானா என்ற பெயரில் இ-பாஸ் பெறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெயர் சங்கி மங்கி என்றும், வண்டி எண் 0000 என்று பதிவிட்டு அந்த இ-பாஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.