கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மழை… மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (13:20 IST)
கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு மழைப் பெய்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் முதலாக கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைபெய்து குளிர்ச்சியை உண்டாக்கியது. வெயிலில் வாடும் மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்