தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு உத்தரவிட மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு தொடர்ந்தவர் இனி ஒரு ஆண்டு காலத்திற்கு வேறு எந்த பொது நல வழக்கு தொடரவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.