தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (13:52 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவ காற்றால் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளிலும் பரவலாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்