ஏற்கனவே சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், புதிதாக சிறைக்கு வருபவர்களால் தொற்று பரவிடக்கூடாது என்ற நோக்கில் 37 மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கைதிகளை மற்ற சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவிட்டு அவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.