தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி மையங்கள் பல செயல்பட்டு வருகின்றன. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து தொழில் வாய்ப்பை பெற இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தொழிற்பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, இலவச மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடை, வரைப்பட கருவிகள், இலவச பஸ் பாஸ் ஆகியவை அரசால் வழங்கப்படுகிறது.