தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் அரிசி விலை! அதிர்ச்சியில் மக்கள்! – காரணம் என்ன?

செவ்வாய், 6 ஜூன் 2023 (08:26 IST)
தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து அரசி ரகங்களில் விலை மெல்ல உயர்வை சந்தித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



தமிழ்நாட்டில் முக்கிய உணவுப் பொருளாக அரிசி இருந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல் அரிசிகள் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் பொன்னி அரிசி ரகங்கள் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே அரிசி விலை தொடர்ந்து மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

அரிசி விலை உயர்வு குறித்து பேசியுள்ள தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சக்திவேல், முன்னதாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து சன்னமாக பொன்னி ரகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகவும், ஆனால் சமீப காலமாக அந்த ரகங்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால், தமிழக அரிசி ஆலைகளுக்கு வரும் ஆந்திரா, கர்நாடகா அரிசி ரகங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரிசி விலை உயர்வில் அரசு நடவடிக்கை எடுத்து விலையையும், அரிசி பற்றாக்குறையையும் சீராக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்