சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது ஓரிரு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று திடீரென சென்னை மாவட்ட கலெக்டர் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்த சபிதா ஐ.ஏ.எஸ்,தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பொறுப்பில் உதயச் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை முதன்மைச் செயலாளராக அதுல்ய மிஸ்ரா,எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக விக்ரம் கபூர், வணிகவரித்துறை இணை ஆணையராக மகேஸ்வரி, தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை முதன்மைச் செயலாளராக வள்ளலார், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட கலெக்டராக அன்புச்செல்வனும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பொன்னையாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர்- முகமது நசிமுதீன்
சுற்றுலாத்துறை ஆணையாளர்- பழனிகுமார்
தமிழ்நாடு கனிமத் துறை மேலாண் இயக்குனர் -வெங்கடேசன்
போக்குவரத்துத்துறை ஆணையாளர்- தயானந்த் கட்டாரியா
உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் -சுனில் பாலிவல்
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண் இயக்குனர்-காமராஜ்
தமிழ்நாடு உப்புக் கழக மேலாண்மை இயக்குனர்- சத்யபிரதா சாஹு
சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையராக கஜலட்சுமி
ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.