தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் வரும் 8ம் தேதி வரை படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி, இன்று முதல் 8ம் தேதி வரை அதிகபட்சமாக வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், தமிழகத்தில் அதிகபட்ச வானிலை ஒரு சில இடங்களில் 2-3 டிகிசி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலையில் லேசான பனிமூட்டம் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும், குறைந்த பட்ச வெப்பநிலை 24-25 டிகிசி செல்சியஸை ஒட்டி இருக்கும்
மார்ச் 10ம் தேதியில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். அதுவரை வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K