குறைந்த கொரோனா; அதிகரிக்கும் டெங்கு! – அமைச்சர் விளக்கம்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (14:56 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இப்போது பரவ ஆரம்பித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை வேறு தொடங்கி விட்டதால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி இருக்கும். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு வார்டை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சில நாட்களுக்கு முன்னர் பார்வையிட்டார்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியின் “தமிழகத்தில் இதுவரை 3 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்