ஒரு கிலோ தக்காளி ரூ.40-த்துக்கு... வியாபாரிகள் கூறுவது சாத்தியமா?

வியாழன், 25 நவம்பர் 2021 (12:23 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது விலை குறையத் தொடங்கியுள்ளது.
 
தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில் உள்ளூர் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்ததால் கிடுகிடுவென விலை உயர தொடங்கியது. இதனால் அதிகபட்சமாக தக்காளில் விலை கிலோ ரூ.150 ஐ தாண்டி விற்றதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
 
இந்நிலையில் பசுமை பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளி விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. சென்னையில் முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.80 ரூபாய்க்கும், நாட்டு தக்காளில் கிலோ ரூ.70க்கும் விற்பனையாகி வருகிறது. வரத்து அதிகரிக்க தொடங்கும்போது மேலும் விலை குறையும் என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் 1 கிலோ ரூ.40க்கு விற்க தாயார் என தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர். வழக்கமாக கோயம்பேட்டில் 86 சென்ட் பரப்பில் உள்ள மைதானத்தில் தான் தக்காளிகள் வந்து இறங்கும். தற்போது மைதானம் பூட்டப்பட்டுள்ளதால் தக்காளி இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்