சிலை வைக்க விதித்த தடை தொடரும்; வீடுகளில் கொண்டாடுங்கள்! – தமிழக அரசு!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (10:57 IST)
விநாயகர் சதுர்த்திக்கு சிலை அமைத்து வழிபட விதிக்கப்பட்ட தடைகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு தெருக்களில் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்றும் சிலைகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் கேட்டு வந்தன.

இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் முதல்வரை நேரடியாக சந்தித்து சிலைகள் வைத்து வழிபடுவது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் சிலைகள் வைத்து வழிபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், சிலைகள் அமைத்து வழிபட விதிக்கப்பட்ட தடைகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிக் கொள்ளவும், அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்