எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இனி கிடையாது! – தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (11:15 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக 2,831 பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் நிறுத்துப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கும், வெவ்வேறு பள்ளிகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பதிலாக அங்கன்வாடி குழந்தைகள் மையங்களை தரம் உயர்த்த உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்