டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

செவ்வாய், 14 ஜூலை 2020 (12:13 IST)
தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுதவிர வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்யலாம் எனவும், சென்னையின் பல பகுதிகளில் மேகமூட்டமாக வானம் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்