தமிழ்நாட்டில் முதன்முறையாக ‘எடப்பாடியார் நகர்’: ஈரோட்டில் புதிய நகர் திறப்பு!

செவ்வாய், 14 ஜூலை 2020 (11:49 IST)
தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பெயரில் முதன்முறையாக நகர் ஒன்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பல வீதிகள் மற்றும் தெருக்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், அரசியல் பிரமுகர்கள் பெயர்களை வைப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் பெயரில் தமிழகம் முழுவதும் பல தெருக்கள் உள்ளன.

இந்நிலையில் தமிழகத்திலேயே முதல்முறையாக நடப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் தெரு ஒன்றிற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட தோப்புபாளையத்தில் புதிதாக உருவாகியுள்ள குடியிருப்பு பகுதிக்கு “எடப்பாடியார் நகர்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் திறந்து வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்