இங்க இருமொழி கொள்கைதான்; நுழைவு தேர்வு வேண்டாம்! – மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்!
திங்கள், 7 செப்டம்பர் 2020 (14:49 IST)
புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் பலர் குரல் எழுப்பி வரும் நிலையில் மத்திய கல்வித்துறைக்கு அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே இருமொழி கொள்கை அமலில் இருந்து வரும் நிலையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் மும்மொழி கொள்கை கொண்டு வருவது குறித்து தமிழக அரசியல் கட்சிகளும், திரை பிரபலங்களும், மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய கல்வித்துறைக்கு தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஏற்கனவே தமிழகத்தில் இருமொழி கொள்கை உள்ளதால் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தேசிய தேர்வு முகமையின் நுழைவு தேர்வு குறித்து பேசியுள்ள அவர் இவ்வாறான நுழைவு தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.