ஜூலை மாத ரேசன் இலவசம்; தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஹோம் டெலிவரி! – முதல்வர் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (15:08 IST)
தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு தொடர்வதால் ஜூலை மாத ரேசன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஜூலை மாத ரேசன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அனைத்து பகுதிகளில் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். பொருட்களை வாங்க செல்ல வேண்டிய நாள், நேரம் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும். 10ம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா அதிகரிப்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்