கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்! மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (13:51 IST)
தமிழகத்தில் அனுமதி பெறாத குடிநீர் ஆலைகளை முடியதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழகம் முழுவதும் முறையான அனுமதி பெறாமல் இயங்கும் குடிநீர் ஆலைகளை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனால் குடிப்பதற்கு கேன் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பல இடங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அனுமதி பெறாமல் இயங்கிய ஆலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அரசின் அனுமதி கிடைத்தப்பின் சீல் வைக்கப்பட்ட ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கலாம் என்றும், அனுமதி அளிப்பதற்கான பணிகளை 15 நாட்களுக்கு செய்யுமாறும் கூறியுள்ளதால் கேன் குடிநீர் முகவர்கள், விற்பன்னர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். இதனால் வழக்கம் போல அனைத்து பகுதிகளில் கேன் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்