தயிர், பால் பாக்கெட்டுகளுக்கும் தடை? – மாற்றுவழியை யோசித்து வரும் அரசு!

புதன், 4 மார்ச் 2020 (10:39 IST)
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பாக்கெட்டில் விற்கப்படும் உணவுப்பொருட்களுக்கு மாற்று வழியை அரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படுவதற்கு தமிழக அரசு தடை விதிக்காதது புகாராக அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் அளித்த பதில் மனுவில் ”பால், தயிர், எண்ணெய் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விலக்கை ரத்து செய்ய கடந்த ஜனவரியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழக அரசுக்கு பரிசீலித்ததன் அடிப்படையில் அரசு இதுகுறித்து ஆலோசித்து வருகிறது” என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் பை தடையை ஆவின் பாலிலிருந்து அரசு தொடங்கலாம் என்று அறிவுறுத்தியதோடு, பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் கேடுகள் குறித்து மக்கள் நடமாடும் திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க சொல்லியும் பரிசீலித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படி ஆவின் பாலை பாக்கெட்டுகளில் விற்காமல் பழைய முறைடில் கண்ணாடி புட்டிகளில் விற்க அரசு திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்