சசிகலா புஷ்பாவால் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (21:27 IST)
பால்வளத் துறை அமைச்சராக இருந்த சண்முகநாதன் சசிகலா புஷ்பாவுடன் நெருக்கமாக இருப்பதால் அமைச்சரவையில் இருந்து அதிமுக மேலிடம் அவரை நீக்கியது.


 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் அவர் கவனித்து வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராஜேந்திர பாலாஜி வசம் இருந்த ஊரக தொழில்துறை, அமைச்சர் பெஞ்சமினுக்கு வழங்கபப்டுகிறது. அமைச்சர் பெஞ்சமின் வசம் இருந்த பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அதிமுகவின் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டிய ராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்