தமிழ்நாட்டிற்கான 2025 - 26ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு வருகிறார்.
ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை
இணைய சேவை தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்
150 வகையான அரசு சேவைகளை இணையதளம் வழியாக வழங்க நடவடிக்கை
கோவை, திருச்சி, மதுரை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்
40 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். வங்கி கடன் பெற அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்படும்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலையாக மாற்றப்படும்.
நாய்களுக்கான கருத்தடை மையங்களை அமைக்க ரூ.20 கோடி ஒஇதுக்கீடு
அறியப்படாத சுற்றுலா தளங்களை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
கருங்குழி - மாமல்லபுரம் இடையே புதிய நான்கு வழிச்சாலை
திருவான்மியூர் - உத்தண்டி நான்கு வழிச்சாலையில் புதிய உயர்மட்ட சாலை
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கருவிகள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை.
சேலம், கடலூர், திருநெல்வேலியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும். போட்டித்தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் கலந்துரையாடல் கூடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படும்.
ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக நறுமண பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் அதில் அமைக்கப்படும்
சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன
கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோயில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. 777 கோயில்களில் நடைபெறும் அன்னதானம் திட்டத்தின் மூலம் தினசரி சராசரியாக ஒரு லட்சம் பேர் பயனடைகின்றனர்
தாய், தந்தையை இழந்து உறவினர் தயவில் வாழும் குழந்தைகளின் கல்வி உதவிக்காக 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் நிதியுதவி
மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பதவி பெறும் வகையில் சட்டத்திருத்தம் நடப்பு கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும். 10 மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2000 மானிய உதவி
விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்
சென்னை - திண்டிவனம் - விழுப்புரம்
சென்னை - காஞ்சிபுரம் - வேலூர்,
கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம்
மேற்கண்ட வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்
ஒன்றிய அரசு நிதி தராததால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும்
பழைமையான தேவாலயங்களை பாதுகாக்க ரூ.10 கோடி நிதி
சமூக நல்லிணக்கத்தை பேணும் சிறந்த 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் கோடி வங்கிக் கடன்
பர்கூர், கல்வராயன் மலை பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு
பூந்தமல்லி, போரூர் மெட்ரோ ரயில் தடம் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்.
அரசு பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னையில் 950, கோவை 75, மதுரையில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்
திருவண்ணாமலை செங்கத்தில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்
தனுஷ்கோடி பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
நீலகிரி, அரிட்டாப்பட்டி பகுதிகளில் வேட்டை பறவைகள் பாதுகாப்பு சரணாலயங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
கலைஞர் கைவினைஞர்கள் திட்டத்தில் 19000 பேர் பயன்பெறும் வகையில் 74 கோடி ஒதுக்கீடு
தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது
சென்னையில் குடிநீர் தடுப்பாட்டை போக்க திருப்போரூர் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
கோவளம் அருகே உப வடி நிலத்தில் 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும்
மதுரை, திருச்சி, தாம்பரம் உள்ளிட்ட 30 நகரங்களில் ரூ.5 கோடி செலவில் முதல்வர் படிப்பகம் அமைக்கப்படும்
விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவன மேம்பாட்டிற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு
ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு
குடிமைப்பணி முதன்மை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும்
கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு
மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழிற் பூங்கா, திருச்சியில் பொறியியல் தொழிற் பூங்கா, ஓசூரில் ரூ.400 கோடி செலவில் டைடல் பார்க் ஆகியவை அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும். கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.
1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும்
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு
14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை
புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும். ரூ.50 கோடியில் அரசு பொறியிடல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் தொடங்கப்படும்.
பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்
நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்
அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்
ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்
பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்
தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களைப் போல, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் மாதம் ₹1000
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,100 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்
மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது.
ரூ.10 கோடியில் மூத்த குடிமக்களுக்கான அன்புச்சோலை மையம்
மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு செய்யப்படும். பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும்
மூன்றாம் பாலினத்தவரின்